ஹாலிவுட் நடிகையை போல் மாறிய பிக்பாஸ் ஜூலி! தீயாய் பரவும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டின் மூலம் புகழ் பெற்றவர் பிக்பாஸ் ஜூலி. வீர தமிழச்சி என்று அனைவராலும் அப்போது பரப்பப்பட்டு புகழ் பெற்றார். இந்த புகழின் மூலம் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அணைத்து தமிழ் மக்களின் பார்வையிலும் பட தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு வரவேற்ப்பு கிடைத்தாலும் போக போக பல சர்ச்சைகளில் ஜூலி சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார்.

   

பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலியின் கை வசம் அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு படமும் உள்ளன. என்னதான் இவர் சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை செய்தாலும் மக்களின் மனதில் ஒரு இடத்தை இவரால் பிடிக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, பல விதமான உடைகளில் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் முழு மேக்கப் போட்டுகொண்டு ஹாலிவுட் நடிகையை போல் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..