குக் வித் கோமாளி புகழ் தனது youtube சேனல் ஹேக் செய்யப்பட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலில் அறிமுகமானார் புகழ். பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதை எடுத்து அவர் அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜயின் ‘யானை’ உள்ளிட்ட படங்களிள் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.
புகழ் பல வருடங்களாக பென்சி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர்கள் குடும்ப விருப்பப்படி ஹிந்து முறைப்படி திருமணத்தையும், பென்சி குடும்பத்தின் விருப்பப்படி முஸ்லிம் முறைப்படி திருமணத்தையும் என மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய புகழ். இவர் அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அதேபோல இவர் ‘பரட்டை புகழ்’ என்ற பெயரில் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்பொழுது அந்த youtube பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.