அஜித்தின் பில்லா படத்தில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானா? நடிகை நயன்தாரா இல்லையா..! புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர் தல அஜித். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.

   

தல அஜித் நடிப்பில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகண்ட படம் பில்லா. ரஜினி நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை 2007ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல். சுரேஷ் மற்றும் பாலாஜி ரீமேக் செய்து தயாரித்தனர். இப்படத்தில் ஒரு ஆக்ஷன் கதாநாயகியாக நயன்தாரா கலக்கி இருந்தார். ஆனால் இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது நயன்தாரா இல்லையாம்.

ஆம் பில்லா படத்தின் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது, பாலிவுட் நடிகை இஷா கோபிகர் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை இஷா கோபிகர் கால்சீட் இல்லாத காரணத்தினாலும், சில கருத்து வேறுபாடு நடந்தாலும் இப்படத்தில் அவர் விலக, அதன்பின் நயன்தாரா நடித்து பில்லா படம் வெளியானது.