ஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன்? தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு…!

இன்றைக்கு விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சுனாமியையும், புயலையும் முன்கூட்டி கணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்று வந்து விட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூட இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக கணித்து இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தாமிரபரணி ஆற்றின் மண்டபமே சாட்சி!

   

தாமிரபரணி ஆற்றின் மையப் பகுதியில் இந்த சங்குகல் மண்டபம் கம்பீரமாக இருக்கும். மூன்று பக்கமும் திறந்த வெளியில், தண்ணீர் வரும் எதிர்திசையில் மட்டும் கல்வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்கு போல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்கு சங்குகல் மண்டபம் எனப் பெயர் வந்தது.

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மட்டம் உயரும் போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால் வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு சப்தம் எழுப்பும். இது சுற்றுவட்டார மக்களுக்கான எச்சரிக்கை.

இதனை குறிப்பால் உணர்ந்து ஆற்றை சுற்றி உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு சென்று விடுவார்கள். அதேபோல் த்ண்ணீர் மிக அதிகமானால் இந்த சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும். இது உச்சபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் தண்ணீர் கொஞ்சம் வடிந்ததும் மீண்டும் சப்தம் கேட்கும்.

அந்த சப்தம் தண்ணீர் குறைய, குறைய குறையும். இன்று இந்த சங்கு கல் மண்டபங்கள் பல கவனிப்பும், பராமரிப்பும் இன்றி காட்சிப் பொருளாக கிடக்கிறது. இதன் பலன் இன்றைய தலைமுறைக்கு தெரியவே இல்லை.

ஆயிரம் சொன்னாலும் நம் தமிழனின் பாரம்பர்யத்தை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த மண்டபங்கள் உனர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.