இது என்னடா நமக்கு வந்த சோதனை..? நேராவே நடக்க முடியலையே..!! பொண்ணுங்க எப்படி கம்பு சுத்துறாங்க சிரிக்காம பாருங்க..

பொதுவாகவே கிராமப்பகுதிகளில் யாராவது, யாருக்காவது சப்போர்ட் செய்தால் நீ ஏன் அவனுக்காக கம்பு சுத்துற? எனக் கேட்பது வழக்கம். உண்மையில் கம்பு சுத்துவதும் ஒரு போட்டியாகவே நடக்கிறது சில கிராமங்களில். நாம் இந்தப் பதிவில் கம்பு சுத்துவது என்றால் எனத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…

   

சோசியல் மீடியாக்களிலும் கூட சிலர் குறிப்பிட்ட கட்சிக்காக வாதம் செய்வார்கள். உடனே நாம் அவர்களை கம்பு சுத்துவதாக கலாய்ப்போம். இன்றைக்கெல்லாம் குழந்தைகள் தெருவில் விளையாடுவதே வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் இன்றைக்கு மித மிஞ்சிப் போய்விட்ட செல்போன்களின் பெருக்கம் தான்.

இன்னும் சொல்லப் போனால், பள்ளிக்கூடங்களில் கூட குழந்தைகள் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் விளையாட்டுக்கு தனி ப்ரீயட் உண்டு. ஆனால் இன்று அந்த பள்ளிக்கல்வியே செல்போனுக்குள் வந்து விட்டது. இதனால் குழந்தைகளுக்கு கூடி சேர்ந்து விளையாடும் தன்மையும் போய்விட்டது.

அண்மையில் நடந்த பொங்கல் பண்டிகை தான் பல கிராமங்களிலும் நாம் மறந்துபோன பழைய விளையாட்டுக்களை புதுப்பித்து நம் கைகளுக்குள் சேர்த்துள்ளது. அப்படித்தான் ஒரு கிராமத்தில் கம்பு சுத்தும் போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களும், இளம்பெண்களும் ஒரு சின்ன கம்பை பிடித்துக்கொண்டு அந்த கம்பை கையில் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள். அவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்போதே திடீரென ஓடச் சொல்கிறார்கள்.

அப்போது பலரும் ஏற்கனவே கம்பைப் பிடித்துக் கொண்டே சுற்றியதால் தலை கவிழ்ந்து விழுகின்றனர். இருந்தாலும் கம்பு சுத்துறதுன்னா சும்மாவா? ஏதோ ராட்டினத்தில் சுற்றுவது போல் சும்மா ஜாலியாக சுற்றிக்கொண்டு ஓடுகிறார்கள். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.