இந்த விளையாட்டை ஒலிம்பிக்லயே சேர்க்கலாம் போலருக்கே… நம்மாளுங்க என்னம்மா விளையாடுறாங்க பாருங்க…

‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

   

மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது.

ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் ஆண்கள் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

பலூனில் முழுக்க தண்ணீர் நிரப்பி ஒருவர் ஒரு பகுதியில் இருந்து தூக்கி வீசுகிறார். அதை இன்னொருவர் கேட்ச் பிடித்து, அதை அடுத்தவருக்கு பாஸ் செய்கிறார். கடைசியில் அங்கிருக்கும் ஒரு வாளியில் பலூனை போட வேண்டும்.

தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை லாவகமாக கேட்ச் பிடித்து பாஸ் செய்து, கடைசி வரை உடையாமல் யார் அதிகமாக பலூனை சேர்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். இந்த விளையாட்டை ஒலிம்பிக்லயே சேர்க்கலாம் போலருக்கே….