என்னை அறிந்தால் படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்த சிறுவனா இது! தற்போது எப்படி உள்ளார் பாருங்கள்..

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த ‘படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்தவர் தான் ஜாக் ராபின்சன்.அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜாக் ராபின்.அதன் பிறகு விஜய் ஆண்டனி நடித்த ‘திமிருபுடிச்சவன்’ படத்திலும் நடித்துள்ளார்.

   

துணை கதாபாத்திரத்தில் நடித்த மூன்று படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் கவனத்தை ஈர்த்த ஜாக் ராபின் தற்போது அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ‘ஹீரோ’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

தற்போது ஜாக் ராபின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.