கால் வலிக்கு மருத்துவமனைக்கு சென்ற பெண்… ஆணாக திரும்பி வந்த பரிதாபம்

சீனாவில் கணுக்கால் வலி காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த 25 வயது பெண் இறுதியில் ஆண் என்று தெரியவந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர், திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பம் தரிக்காத நிலையில், கணுக்கால் வலியுடனும் இருந்துள்ளார்.

   

அப்பொழுது கணுக்கால் வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு, மருத்துவர்கள் அதிர்ச்சியளிக்கும் உண்மையைக் கூறியுள்ளனர்.

ஆம் அப்பெண்ணின் உடலுக்குள் ஆண்களுக்குரிய செல் பண்புகள் இருப்பதாக தெரிய வந்ததைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், “எனக்கு கணுக்காலில் வலிக்கு சிகிச்சை எடுக்க வந்த எனக்கு இந்த பரிசோதனை முடிவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் மற்றவர்களை விட மெதுவாக வளர்ச்சியடைந்ததன் காரணமாகவும் மற்றும் எனக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்ததாலும் சிறுவயதில் என் அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார்.

அப்போது, இந்த பிரச்சனை வளர வளர சரியாகிவிடுமென்று மருத்துவர் தெரிவித்த நிலையில், ஆனால் தனக்கு தற்போது வரை மாதவிடாய் வரவில்லை என்றும் இதனை யாரிடமும் நான் கூறியதில்லை”,என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சீன மருத்துவர் டோங் ஃபெங்கின் கூறுகையில்,”சில நபர்களை பாதிக்கும் ‘இன்டர்செக்ஸ்’ என்ற ஒரு அரிய வகை நோயானது, இப்பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது உடலளவில் பெண்ணாக பிறந்த இவர் உயிரளவில் ஆணாக(Y குரோமோசோம்) இருப்பதாலே கருப்பை இல்லை.. ஆதலால் கருத்தரிக்க முடியாது எனறும் கூறியுள்ளார்.

மேலும்,பெண்களுக்கு இளம் வயதில் உடலுக்குள் உருவாகும் எலும்புகளும் உங்களுக்கு உருவாகவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிகிறது.

எனவே, இனி ஆணாக இருக்கவேண்டுமா? அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.