குக் வித் கோமாளி அஷ்வினுக்கும் எனக்கும் என்ன உறவு தெரியுமா? உண்மையை உடைத்த விஜே பார்வதி!

குக் வித் கோமாளி தான் இப்போது மக்களின் பெரிய பேச்சாக உள்ளது. எவ்வளவு மன கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக உள்ளது. சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை. இந்நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி அட்ராசிட்டி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல இளம் பெண்களின் மனதை கவர்ந்த இடத்தில் இருப்பவர் அஷ்வின்.

   

மேலும், பிரபல யூடியூப் சேனலில் விஜேவாக பணிபுரிந்து வந்தவர் தான் பார்வதி. இவருக்கென இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரும், குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கோமாளியாக பங்கேற்றார். ஆனால் ஒரு சில எபிசோடுகளில் மட்டுமே காண முடிந்தது. இந்நிலையில், அஸ்வினுக்கு என்ன உறவு என்பதை பகிர்ந்துள்ளார்.

அதில், சமீபத்தில் அஸ்வினுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்த பார்வதி, அஸ்வினை தனக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே தெரியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், 2014 ம் ஆண்டே அஸ்வினை தனக்கு தெரியும் என்றும், இவரும் அஸ்வினும் ஒன்றாக விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சி ஆடிஷனுக்கு ஒன்றாக கலந்து கொண்டதாகவும், தனக்கும் அஸ்வினிக்கும் இருக்கும் அழகான நினைவு என கூறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Absentminded (@vj_parvathy)