கேப்டன் விஜய்காந்த் படப்பாடலுக்கு நடித்து அசத்திய அவரது மகன்.. என்ன பாட்டு தெரியுமா? அப்படியே அப்பாவை போலவே இருக்காரே..!

தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

   

 

ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் காலத்திலேயே விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். நடிகராக இருந்தாலும் ஏழைத் தொண்டர்களை எப்போதும் தனிக்கவனம் செலுத்தி கவனிப்பார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக முதன் முதலாக உதயமாகி தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. அதே நேரம், அந்தத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றீபெற்றார். அதன் பின்னர் அதிமுகவோடு அணி சேர்ந்த தேமுதிகவுக்கு, திமுகவை கூட கூடுதல் இடங்கள் கிடைக்க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. நாளடைவில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாக தேமுதிகவும் பலவீனமடையத் துவங்கியது.

இந்த சூழலில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை வகித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. அண்மையில் முடிந்த தேர்தலில் அமமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. இருந்தும் இந்தத் தேர்தலில் தேமுதிகவுக்காக கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.இப்போது லாக்டவுணில் வீட்டில் இருக்கும் கேப்டன் மகன் விஜய பிரபாகரன் தன் அப்பாவின் திரைப்படமான ‘தவசி’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தன..தந்தன தை மாசம்..அதுதந்தது..தந்தது உன்னைத்தான்’ பாடலுக்கு நடித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவைப் பார்த்த கேப்டன் ரசிகர்கள் அப்படியே அப்பாவைப் போல் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.