சிதைந்து போன அழகிய குடும்பம் : அடுத்தடுத்து உயிரிழந்த கணவன், மாமியார், மாமனார் : அதிர்ச்சியில் இளம் மனைவி!!

இந்தியாவின் கேரளாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பம் கொரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை பெரும் மகிழ்ச்சியோடு இருந்தது.

ஆனால் அந்த குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி இல்லை, காரணம் கொரோனா என்ற கொடிய வைரஸ். சினி ஐசக் 8 நாட்கள் இடைவெளியில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமியாரை கொரோனாவுக்கு இழந்துள்ளார்.

   

இதில் சோகம் என்னவென்றால் அவர்களுக்கு சினி ஐசக் மூலம் கொரோனா பரவியது என்பது தான். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக சினி ஐசக் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி சேர்ந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 25ஆம் திகதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் மே 5ஆம் திகதி கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால் அதற்குள் சினி ஐசக் மூலம் அவர் கணவர் உல்லாஸ் ஜாய் (36), மாமனார் ஜாய் (73) மற்றும் மாமியார் சிலிசி (63) ஆகியோருக்கும் கொரோனா பரவியது.

இதில் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கடந்த 12 மற்றும் 18ஆம் திகதி உ.யிரிழந்தனர். உல்லாஸ் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து சினி ஐசக் இன்னும் வெளிவராமல் கதறி வருகிறார்.

இதனிடையில் வெறும் 16 நாட்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த சினி ஐசக் தனக்கு கொரோனா வார்டில் பணி வேண்டாம் என கூறியும் அவருக்கு அங்கு பணி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அவருக்கு கொரோனா ஊசி போடவில்லை எனவும் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், சினி ஐசக் கொரோனா பணி வேண்டாம் என கூறவில்லை,

அந்த பணிக்காக அவரை வேலைக்கு எடுத்தோம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு புகாரும் இன்னும் கொடுக்கவில்லை என உல்லாஸின் சகோதரர் கூறியுள்ளார்.