நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட 6 பிரபல நடிகர்களின்…. நீங்கள் பார்த்திடாத சிறு வயது புகைப்படங்கள் இதோ…!!!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப புகைப்படங்களை பார்ப்பதற்கு அவர்களுடைய ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். அந்த வகையில் ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்களை இப்போது பார்க்கலாம்.. ரஜினிகாந்த் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அவரது வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே பார்ப்பவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

   

பேருந்து நடத்துனர் முதல் தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் வரை, ரஜினிகாந்த் எப்போதும் பலருக்கு இன்ஸ்பிரேஷன் தான். இவரின் குழந்தை வயது புகைப்படம் இதோ.

நடிகர் விஜய் தனது 10வது வயதில் வெற்றி  என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து நடித்தார்.

தன்னுடைய 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு  படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார்.  பூவே உனக்காக   திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் கமலஹாசன் தனது நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருகிறார் .

பல ஆண்டுகளாக அவர் தனது ஆற்றல் நிரம்பிய நடிப்பிற்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த ஒரு சில நடிகர்களில் நடிகர் அஜித்குமாரும் ஒருவர்.  தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சூர்யா  நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர்.

2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார்.  இவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளன.

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார்.

இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.