நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா சிறியவரா!! இத்தனை வயது வித்தியாசமா? ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி நடிகை சினேகா. ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக பிரபலமானவர் சினேகா. இவர் என்னவளே படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார். அப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

   

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம். திருமணத்திற்கு பின்னரும் வெள்ளித்திரையில் தனக்கு என்று தனி இடத்தினை நடிகை சினோக தக்க வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இந்த ஜோடியை பற்றி பல செய்திகள் தெரிந்து இருந்தாலும் சினேகாவின் கணவர் பிரசனன்னா சினேகாவை விட சிறியவர் என்பது பலருக்கும் தெரியாது.

கிட்டத்தட்ட சினேகாவை விட பிரசன்னா 10 மாதம் 16 நாட்கள் இளையவராம். என்னதான் வயதினை பற்றி விமர்சனங்கள் வந்தாலும் அதனை மனதில் எடுத்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை மற்றவர்கள் புகழும்படி வாழ்ந்து வருகின்றார்கள். காதலுக்கு வயது தடை இல்லை என்பதை இந்த காதல் ஜோடியும் நிறுபித்து விட்டனர்.