பசியால் துடித்த குஞ்சுக்கு தாய் பறவை ஊட்டிய உணவு.. மனிதர்களை தலைகுனிய வைத்த அந்த உணவு எது தெரியுமா?

முன்பெல்லாம் நம் வீட்டு முன்பு கூட்டம், கூட்டமாக இருந்த பறவையினங்கள் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. செல்போன் கதிர்வீச்சுகள் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களை அழித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இன்னொன்று முன்பெல்லாம் அதிக அளவில் ஓட்டு வீடுகள் தான் இருந்தன. ஆனால் இப்போது காங்கிரீட் வீடுகள் வந்துவிட்டதால் பறவைகளும் தங்கள் வாழ்விடத்தை இழந்துவிட்டன.

   

விவசாய நிலப்பரப்பும் குறைந்து விட்டது. அதனால் நேரடியாக முன்பெல்லாம் தோட்டத்தில் இருந்தும், நெல்வயல்களில் இருக்கும் பூச்சிகள், சின்ன,சின்ன தானியங்களையும் சாப்பிட்டு வந்த பறவையினங்களுக்கு இப்போது அதுவும் கிடைப்பது இல்லை. இப்படியான சூழலில் ஒரு பறவை தன் குஞ்சுக்கு கொடுத்த உணவு, மனித இனத்தையே தலைகுனிய வைத்துள்ளது.

அப்படி என்ன உணவு எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ப்ளாக் ஸ்கிம்மர் பறவை ஒன்று, தன் குஞ்சுக்கு யாரோ குடித்துவிட்டுப் போட்ட சிகரெட்டின் பஞ்சு பகுதியை உணவு என நினைத்து ஊட்டி விடுகிறது.

இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர், கரென் மேசன் என்பவர், ‘’நீங்கள் புகைக்கிறீர்கள். என்றால் அந்த பட்ஸை கீழே போட்டுவிட்டு செல்லாதீர்கள்” என பதிவிட அது மனிதர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு என்னும் பெயரில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

இதைவிட முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால், கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரையில் இருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் சேகரித்து, அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. அதற்குத்தான் நம்ம ஊரில் பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்!