பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்பொழுது தெரியுமா? வெளியான தகவல்- குஷியில் ரசிகர்கள்

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இதுவாக அமையும் என ஒரு பக்கம் பேச்சு அடிபட்டது. அதற்கு காரணம் கமல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அவர் நிச்சயம் படு பிசியாக இருப்பார் என்பது தான்.

   

கடந்த 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் மூன்று சீசன்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக தாமதம் ஆனது. இந்த நிலையில், இந்தாண்டு குறிப்பிட்ட தேதியில் தொடங்குவதற்காக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி ஐந்தாவது சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் அவர் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பார் என்பதால் ஜூன் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த 5 வது சீசன் போட்டியில் யார் யார் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்கள் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.