பிக்பாஸ் மகேஸ்வரியின் கணவர் இவரா….? மகனும் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே…. நீங்களே பாருங்க…!!!!

மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொலைக்காட்சிகளிலும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதோடு கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர் மத்தியில் பிரபலமாகும் வழக்கம் உடையவர்.

   

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பாக மகேஸ்வரி சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்தார். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்த இவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் திருமணமான பிறகு தன்னுடைய முன்னாள் கணவன் வீட்டில் தான் அனுபவித்த பிரச்சனைகள் குறித்து பேசி இருந்தார்.

அதில் தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் தன்னை அடிமையாக நடத்தினார்கள்.

மற்ற ஆண் நண்பர்களோடு  பழகக் கூடாது என்றும், சீரியல்களில் நடிக்ககூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.

அப்படி நடித்தால் தங்களுடைய குடும்ப மானம் போய்விடும் என்றும் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறினார்.

இதனால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள விவகாரத்து முடிவை எடுத்தேன்.

விவாகரத்துக்கு பிறகு தான் என்னுடைய மகனோடு நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். இவருக்கு கேசவ் என்ற ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவருடைய முன்னாள் கணவர் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.