முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வருவது யார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர் பிரபலமா? ஷாக்கில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட குடும்ப தொடர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்நிலையில் தற்போது சித்ராவுக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

   

நடிகை சுஜிதா தமிழில் ‘பூவிழி வாசலிலே’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் அண்ணி என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுஜிதாவைப் பற்றி தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘முந்தானை முடிச்சு’.

100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன இப்படத்தினை பார்ப்பதற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்தனர். இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வருவது யார் தெரியுமா? நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவே தான். இந்த விடயம் பலருக்கும் தெரியாத நிலையில் இந்த தகவல் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.