யாரு சாமி இவன்..! ஒத்த ஆள இருந்து மொத்த teamஐயும் தூக்கிட்டாங்க..!! மெய்சிலிர்க்க வைத்த காணொளி

தமிழ் மண்ணில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. தற்பொழுது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுகின்றது, கை-பிடி என்ற வார்த்தையே இப்பொழுது கபடியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள். கபடி, கபாடி,சடுகுடு, பலிஞ்சடுகுடு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

   

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க பயிற்சியளிக்கும் விதமாக இந்த கபடி விளையாட்டு தொடங்க பட்டது. ரெய்டர் காளையாக கருதப்பட்டு அவரை எதிரணி வீரர்கள் அடக்க முயற்சிக்கின்றனர். பின்னர் வீர விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியது. பல இளவரசர்கள் தங்கள் பலத்தை காமிக்க சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர்.

1980 யில் முதன் முறையாக ஆசிய கபடி போட்டி நடத்தப்பட்டு இந்தியா அணி அதில் சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல் கபடி உலக கோப்பை 2004 ல் நடைபெற்றது, அதிலும் இந்தியா முதல் உலக கோப்பையை கைப்பற்றியது, இதுவரை இந்தியா 8 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த வீடியோவில் வரும் மாமனிதன் கபடி விளையாட்டில் ஒரே ஆளாக எதிரணியை கதிகலங்க வைக்கிறார் அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்கள்.