விஜய் டிவியின் இந்த பிரபல சீரியல் முடியப்போகிறது? வெளியான புகைப்படம்- வருத்தத்தில் ரசிகர்கள்

வெகு காலமாக மக்களுக்கு புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகம் செய்து புகழடைந்து வருவது விஜய் தொலைக்காட்சி என்றே கூறலாம். இப்படி ஆடல் பாடல், நடனம், நடிப்பு என அனைத்திற்கும் தனித்தனியாக நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல திறமையானவர்களை வளர்த்து வருகிறது. இப்படி இந்த தொலைக்கட்சியில் இருந்து திரைக்கு சென்றவர்கள் தான் அதிகம்.

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜா, ராஜா ராணி 2 என பல சீரியல்கள் மிகவும் பிரபலம். அந்த வகையில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம். குடும்ப கதையை மையமாக வைத்து சென்று கொண்டிருக்கு இந்த சீரியல், கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த சீரியல் விரைவில் முடிவடையவுள்ளது. ஆம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்துடன் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..