விஷப் பாம்பை ஏவி இளம் மனைவியை கொலை செய்த கணவன் : வழக்கில் புதிய திருப்பம்!!

இந்தியாவில் கொடிய விஷப் பாம்பை ஏவி மனைவியை கணவன் கொலை செய்த வழக்கில் புதிய திருப்பமாக அவரது குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களின் பெயர்களும் தற்போது இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்தது.

   

இதற்கு சிகிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொடிய விஷப் பாம்பு கடித்ததில் இறந்தார்.

அறையில் இருந்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர். முதலில் சாதாரண பாம்பு கடி என்று கருதப்பட்ட இச் சம்பவம் பின்னர் கொலை வழக்காக மாறியது.

உத்ரா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொடுமைப்படுத்தினார்.

உத்ராவை கொலை செய்துவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இறந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சூரஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது குற்றப் பத்திரிகையை கொல்லம் குற்றப் பிரிவு டி.எஸ்.பி அசோகன் நேற்று முன் தினம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் சூரஜ்ஜின் தந்தை சுரேந்திரன், தாய் ரேணுகா, சகோதரி சூரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 200 பக்கமுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் வீட்டு கொடுமை, நம்பிக்கை துரோகம், தடயங்ளை அழித்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.