1 இல்ல 2 இல்ல மொத்தம் 38 லேங்வேஜ்..! அந்தர் பண்ணும் கங்குவா.?? வெளியான சினிபீக்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா. இவர் ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான விமர்சனங்களை பெற்ற இவர், காலம் செல்ல தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு இவரை இவரது ரசிகர்கள் பாசமான நடிப்பின் நாயகன் என்று கூறுவது உண்டு.

   

நடிப்பு மட்டுமல்லாமல் அகரம் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பில் வேலையில் பிஸியாக இருக்கிறார் நடிகர் சூர்யா .

இயக்குனர் சிறுத்தை சிவா தனியார்  youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். தற்போது அந்த பேட்டியில் அவர் 38 மொழிகளில் இப்படம் உருவாக்கப்படுகிறது 3d வெர்ஷன் மற்றும் ஐ மேக்ஸ் வெர்ஷன் வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரையும் மார்க்கெட் பண்ணி ரிலீஸ் செய்துள்ள மாடல் எல்லாம்  கிராஸ் பண்ணி செய்துள்ளோம் என்று கூறி இருக்கிறார்.

ரிலீஸ் ஆகும் அனைத்து மொழிகளிலும் வேற மாதிரி ட்ரை பண்ணி இருக்கிறோம் நாங்கள் நினைப்பது போல் படம் இருந்தால் நம்பர் ரீச் வைஸ்  ஸ்பைஸ் தமிழ் சினிமாவில் ரீச் வைஸ் நிறைய டோர்ஸ்  ஓபன் செய்யும் என்று இதில் அவர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது