10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி… மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தம்பதியினர்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகனான ராம்சரண் தற்பொழுது தான் அப்பாவாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

‘சிறுத்தை’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ராம்சரண்.. இவர் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தின் மூலம் நடிகர் ராம்சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார். இவர் நடிகர் சிரஞ்சீவி மகனும் ஆவார். தொடர்ந்து டோலிவுட்டில் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

அப்பாவை போலவே நட்சத்திர நடிகராக இளம் வட்டாரத்தை வளைத்துவிட்டார் என்று கூறலாம். இவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் வெளியான RRR  திரைப்படத்தில் கூட ராம்சரண் சிறப்பாக நடித்திருந்தார். நடிகர் ராம்சரண் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி தற்பொழுது 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது உபாசனா காமினேனி கர்ப்பமாக உள்ளார். இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகரும் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் RC 15 எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ராம் சரண் அப்பாவாக இருக்கும் இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.