பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறுமிக்கு அங்குள்ள அறுவை சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில் உறவினர்கள்,
மக்கள் சிறுமிக்கு தொற்று நோய் பாதிக்கப்பட்டு இறந்ததாக எண்ணி பயத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.
இதையடுத்து, தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே இடுகாட்டிற்கு தூக்கிச் சென்று தன்னுடைய மகளுக்கான இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 11 வயது சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என காவல் துணை ஆணையர் கன்ஷ்யம் தோரி தெரிவித்துள்ளார்.
Video of man carrying body of his 11-year-old ‘Covid-positive’ daughter in punjab, Jalandhar.
– this is the Digital India #ModiMustResign pic.twitter.com/qNfMM9zXXc— Das Vanthala (@DasVanthala) May 15, 2021