12 வருட திருமண வாழ்க்கை…சந்தேக புத்தியால் மனைவியை வேவு பார்த்த கணவன் : இறுதியில் நடந்த பரிதாபம்!!

தமிழகத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

   

இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

 

இதனால் உமாவின் பெற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காண தங்களது கிராமமான ஈத்தங்காட்டில் ரமேஷ் பெயரில் இடம் வாங்கி வீடு ஒன்றை கட்டி குடியமர்த்தியுள்ளனர்.

அங்கு வந்தும், உமா தன்னுடைய டெய்லரிங் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். தன்னிடம் துணி தைக்க வருபவர்களிடம் செல்போனில் பேசுவதும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விதவிதமான மாடல்களில் யு-டியூப் பில் பார்த்து அந்த மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைப்பதுமாக உமா இருந்துள்ளார்.

இதன் காரணமாக உமாவின் போன் அடிக்கடி பிசியாக இருந்துள்ளது. ரமேஷ் போன் செய்யும் போது எல்லாம், நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறு நபரிடம் தொடர்பில் உள்ளார் என்று கூற, இதை வைத்து ரமேஷ் அடிக்கடி தன் மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் வீட்டிலேயே காவலாளியாக முடங்கிய ரமேஷ் மனைவியை வேவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு பால் கொண்டு வருபவர்கள் உட்பட அனைவர் மீதும் சந்தேகமடைந்த ரமேஷ், தனது வீட்டை சுற்றி வீட்டை மறைக்கும் அளவிற்கு காம்பவுண்ட் சுவர் கட்டியதோடு மனைவியையும் வெளியே அனுப்பாமல் வீட்டு சிறையிலேயே வைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த உமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவனுக்கு தெரியாமல் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற ரமேஷ் நல்லவர் போல் பேசி சமாளித்து மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த பின், நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி தூங்கிய பின், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரமேஷ் உமாவை துடி துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

தாயின் சத்ததைக் கேட்டு குழந்தைகள் கண் விழிக்கவே உடனே, அவர் அங்கிருக்கும் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.