28 வயதான இளம்பெண்ணுடன் வாழ்க்கையில் இணைந்த 78 வயது தாத்தா! சமுதாயத்தில் தம்பதி சந்திக்கும் சவால்கள்.. புகைப்படம்

அமெரிக்காவில் 48 வயது வித்தியாசம் கொண்ட தம்பதி திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில் சமுதாயத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்துள்ளனர்.

Guy என்பவருக்கு தற்போது 78 வயதாகிறது. 42 ஆண்டுகள் இவருடன் வாழ்ந்த மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இ.ற.ந்.து.வி.ட்டார்.

இதன்பின்னர் யோகா வகுப்பில் சேர்ந்த Guy, Kelsey (28) என்ற இளம்பெண்ணை அங்கு சந்தித்து நட்பாகியுள்ளார்.

இது பின்னாளில் காதலாக மாறியது, இருவருக்கும் 48 வயது வித்தியாசம் உள்ளது என்பதை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

இது குறித்து Kelsey கூறுகையில், பார்த்த உடனேயே எங்களுக்குள் காதல் வரவில்லை. பேசி பழகிய பின்னரே மனதால் ஒன்றானோம்.

முதலில் எங்கள் காதல் குறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. எங்களை பார்க்கும் பலரும் நான் Guy-ஐ பராமரித்து கவனித்து கொள்ளும் பெண் என நினைத்து விடுகிறார்கள்.

அவரின் வயது அதிகம் என்பதால் அவரை இழந்துவிடுவேன் எனவும் பயம் உள்ளது. ஆனால் இ.ற.ப்பு என்பது எப்படியும் வரும், அதுவரை அதை நினைத்து கவலைப்பட கூடாது என்பதை உணர்ந்துள்ளேன்.

அதுவரை ஒருவர் மீது ஒருவர் அதிக காதலை கொண்டு வாழ்வோம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *