3 வயது குழந்தையுடன் உற்சாகமாக துள்ளி கு தித்து விளையாடும் நாய்! மில்லியன் கணக்கான பார்வைகளை க வர்ந்த வீடியோ

மூன்று வயது சிறுமி தனது இரண்டு வயது ரோட்வீலர் நாயுடன் டிராம்போலைனில் கு தித்து விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள வயோமிங்கைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற குழந்தையும் அவளது இரண்டு வயது கோனா என்ற ரோட்வீலரும் எந்த ஒரு க வலையும் இல்லாமல் நீல டிராம்போலைனில் மேலும் கீழுமாக குதித்து பவுன்சிங் செய்கின்றனர்.

இந்த காட்சி பார்வையார்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்துள்ளது.

குறிப்பாக சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த பின்னர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பிரத்யேக சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, அதில் உரிமையாளர்கள் தங்கள் செல்ல பிராணிகளின் அன்றாட வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோவும் மில்லியன் கணக்கான பார்வைகளை கவர்ந்து வருகின்றன.