36 வயது விவாகரத்தான பெண் நான்! மகளிர் தினத்தன்று தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ..!

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர். இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மிகவும் ஜாலியாக இருக்கும். இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் டிடி இதுவரை தனது விவாகரத்து குறித்து வெளியே பேசியதே இல்லை. இன்று பெண்கள் தினம், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிடி சில சார்ட்டுகளை கையில் வைத்துள்ளார்.

அவற்றில் “36+ல் விவாகரத்து”, “36 +ல் குழந்தையின்மை”, “36+ல் மூட்டு வலி”, “ஆனாலும் 36+ல் சந்தோஷம்”, “ஏனென்றால் எல்லோருடைய டைம்லைனும் வெவ்வேறானவை”, “ஆக, உங்கள் சந்தோஷத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் உங்களுடைய டைம்லைனை நீங்கள் என்ஜாய் பண்ணுங்க”, “Happy Womens Day” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் DD யின் இந்த வீடியோக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், வாழ்வில் முடங்கி கிடக்கும் பெண்கள் பலருக்கும் இது சிறந்த Motivation எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.