38 வருட திரைப்பயணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்காத ஒரே நடிகை.. யார் தெரியுமா? நீங்களே பாருங்க!

கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். பல வருடங்களாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் பெரிய வசூல் புரிந்து சாதனை படைத்தது.

   

அதனை தொடர்ந்து தற்போது ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் உடன் தற்போது உள்ள இளம் நடிகைகளும் நடிக்க ஆசை படுவார்கள். அப்படி இருக்கையில் தனது 38 வருட தமிழ் சினிமாவின் திரைப்பயணத்தில் ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காத ஒரு நடிகை தான் ஊர்வசி.

ஆம், நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும் அப்போது மாஸ் ஹீரோவாக இருந்த ரஜினியுடன் காமெடிக்கு பெயர்போன ஊர்வசி நடிக்கவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம் என்று தான்.