42 வயதிலும் இவ்வளவு இளமையா! அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் லேட்டஸ்ட் லுக்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ்.  இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அவர்களுடன் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குரு சோமசுந்தரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி வெளியாகிய அசுரன் படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இதில் தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை மஞ்சு வாரியார் தற்போது மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார். இந்த நிகழ்விற்கு வந்த நடிகை மஞ்சு வாரியார், உடல் எடை குறைந்த 42 வயதிலும் மிகவும் அழகான தோற்றத்தில் தெரிகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம அசுரன் பட நடிகையா இது, என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..