என்னதான் நாம் ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்லிக் கொண்டாலும் இன்னும் ஜாதி, மத வேறுபாடுகள் அதிக அளவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பல்வேறு சமயங்களில் இது தொடர்பான சம்பவங்களை வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் நாம் அவ்வப்பொழுது கண்டு வருகிறோம். தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் தாழ்த்தபட்ட சமூகத்தினரின் கதையை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த 5 திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கர்ணன்:
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை துஸரா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, கௌரி கிஷான் போன்று பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழும் கிராமத்தில் ஒரு பேருந்து கூட நிற்காது. தங்களது உரிமைக்காக போராடி தங்கள் உரிமையை மீட்டெடுப்பார் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ். இத்திரைப்படம் பல விருதுகளை வாங்கி ககுவித்தும் குறிப்பிடத்தக்கது.
கபாலி:
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாரித்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கபாலி. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
மலேசியாவில் தமிழர்கள் பெரும்பாலும் அடிமை நிலையில் வாழ்வதாலும், தமிழனுக்கு தமிழனே வில்லாதி வில்லனாய் மாறிடுவதாலும் அப்பாவி தமிழர்களுக்கு ஒரு மீட்பராக மாறுகிறார் கபாலி கதாபாத்திரத்தில் ரஜினி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெய் பீம்:
நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்து ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெய் பீம். பழங்குடி இருளர் மக்களின் அவலத்தைச் சொன்ன ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.
இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த சிலர் மீது பொய் வழக்கு போடுவார்கள். அவர்களை குற்றவாளிகள் என சொல்லி போலீசார் வழக்கை முடிப்பார்கள். மனித உரிமை வழக்குகளுக்காக கட்டணம் வாங்காத நேர்மையான வக்கீலாக சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களின் வாழ்க்கை முறையை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டியது.
அசுரன்:
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷும், இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்த 4வது வெற்றி திரைப்படம் அசுரன். வெற்றிமாறனின் திரைப்படங்களில் பெரும்பாலானவை தீரா பாகையும், துரோகத்தையும் பழி வாங்குவதையும் சொல்பவை.
இந்த படமும் அதே போல தான் ஜாதி மோதல், பகை, பழிக்கு பழி என தன் குடும்பத்திற்காக அசுர வேட்டையை நடத்துகிறார் நடிகர் தனுஷ். இத்திரைப்படத்திற்காக நடிகர் தனுசுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
பரியேறும் பெருமாள்:
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தன்னுடைய முதல் படத்திலியே தரமான கதையை இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். 2018-ல் வெளியான இந்த படத்தை இயக்குனர் பார ரஞ்சித் தயாரித்திருந்தார்.
கதாநாயகனாக கதிர் நடிக்க கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பற்றிய வெளிப்பாடாகவே இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. சட்டக் கல்லூரியில் நுழையும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சேர்ந்த hero படும் அவமானங்களை பற்றி இந்த திரைப்படம் கூற ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.