50 வயதில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா…. வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டில் முடிந்து போனது

   

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2003 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் சுகன்யா.அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி படங்களிலும் பிசியான நடிகையாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தீ இவன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சுகன்யா சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.