நடிகை நதியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நதியா ‘பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, தாமிரபரணி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா கொலுசு என பிரபலமாக இருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நதியா.
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இவ்வளவு அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…