கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் உள்ள சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா(25). அதே கிராமத்தை சேர்ந்தவர் 65 வயதான சங்கரண்ணா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேகனாவுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் பிரிந்து விட்டதால் மேகனா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மேகனாவுக்கு 65 வயதான சங்கரண்ணாவிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சங்கரண்ணாவுக்கு திருமணம் ஆகி பேரன், பேத்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இருவரும் நட்பாக தான் பழகி வந்தனர். ஆனால் அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த வகையில் மேகனா தனது மனதில் உள்ள காதலை சங்கரண்ணாவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்த காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் கழுத்தில் மலர் மாலையோடு ஜோடியாக இருக்கும் திருமண புகைப்படங்களை
முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்