7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட மீன் ! அப்படி என்ன இருக்கிறது இந்த மீனில்?

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்தது அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீன் சுமார் ரூ 7.80 லட்சத்திற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் விற்பனையானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே ரக மீன் சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.

   

பொதுவாக இந்த ரக மீன்கள் சீனா – கொரியாவிற்கு இடைபட்ட கடற்பகுதியான சவுத் எல்லோ கடல் பகுதியில் அதிகம் காணப்படும். இந்த மீன்கள் பெரும்பாலும் கடலின் ஆழத்தில் வாழும் என்பதால் இதனை பிடிப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக கருதப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இது கருவுறும் காலம் ( 2 மாதம்) தான் கடலின் மையப்பகுதிக்கோ அல்லது மேற்பகுதிக்கோ வரும். அதனால் ஆண்டிற்கு 2 மாதம் மட்டுமே இந்த மீன்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுவும் இந்த ரக மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாவதற்கு முக்கியமான காரணமாகும்.

1970களில் சீனாவில் சுமார் 2 லட்சம் குரோக்கர்ரக மீன்கள் பிடித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. அதன் பிறகு கடலில் குரோக்கர் ரக மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் இந்த மீனை சிவப்பு பட்டியலில் சேர்த்துவிட்டது.

இந்த மீன் மீன் ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனையாகுகின்றது. இந்த விலைக்கு வாங்கும் அளவிற்கு இந்த மீனில் என்ன தான் உள்ளது என்ற சந்தேகம் காணப்படும்.

இந்த குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படும். இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகளின்றி காயம் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகளின் போது இதை பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமாம்.

மேலும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. குறிப்பாக அவர்களின் வாழ்நாளையே அதிகரிக்கும் குணம் இந்த மீனிற்கு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.