70 லட்சம் செலவில் பறக்கும் விமானத்தில் நடந்த திருமணம் !! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா !! வீடியோ !!

மதுரையில், திருமணத்திற்காக ஒரு விமானத்தை, ‘புக்’ செய்து உறவினர்கள், நண்பர்கள் சூழ வானில் பறந்தவாறு, டாக்டர் ராகேஷ் – தீட்ஷணா திருமணம் நடந்தது. ஜம்புரோபுரம்கட்டுமான நிறுவனர் ஜீவரத்தினம் மகள் தீட்ஷணா மனநல ஆலோசகர். இவரது மாமா மகன் டாக்டர் ராகேஷ்.

இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.திருமணத்தை, ‘மதுரை வியக்க நடத்த வேண்டும்; விமானத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும்’ என மணமக்களின் தாத்தா விருப்பப்பட, நேற்று மணநாள் குறிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன், தனியார் விமானம், ‘புக்’ செய்யப்பட்டது.

   

விமானத்தில், 150 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு முன்கூட்டி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு உறவினர்கள், நண்பர்கள் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை, 6:40 மணிக்கு விமானம் மாவட்டத்திற்குள் பறக்க துவங்கியது.ஹிந்து முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, காலை, 7:40 மணிக்கு பறக்கும் விமானத்தில் திருமணம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு விமானம் தரையிறங்கியது. தொடர்ந்து, அண்ணா நகர் மண்டபத்தில் மற்ற நிகழ்ச்சிகள், விருந்து நடந்தது.

இந்தநிலையில் தற்போது அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.மேலும் தெரிந்துகொள்ள விடியோவை பாருங்க.