காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயதுக் குழந்தைக்கு தாயால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகனை தாய் துடிதுடிக்க அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்த பெண் உதயா (24). இவரை சுரேஷ் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிக்கு, உமேஷ் என்ற 3 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவர் சுரேஷ் மற்றும் உதயாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது, உதயா தனது மகனுடன் ஜிமெட்டிலா பகுதியில் வசித்து வந்தார். கணவனை பிரிந்த தனிமையில் வசித்து வந்த உதயாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கரன் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், ஜீடிமெட்லாவில் உள்ள பகத்சிங் நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, தனது கணவர் சுரேஷ், மகன் உமேஷை பார்க்க விரும்புப்போது மட்டும் உதயா, தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று மகனை அழைத்து சென்று காட்டி வந்துள்ளார்.

மகனை சுரேஷ் சந்தித்த பிறகு வாடகை வீட்டிற்கு வந்து, பாஸ்கரனுடன் வசித்து வந்துள்ளார். அப்போது இப்படிய சென்று கொண்டிருந்தால், நம்முடைய உறவுக்கு உமேஷ் இடையூறாக இருந்துவிடுவான் என்று காதலன் பாஸ்கரனுடன் சேர்ந்து உதயா மகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, உதயாவும், பாஸ்கரனும் சேர்ந்து உமேஷை கடுமையாக தாக்கியதில், மயக்கமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றிய தகவல் அறிந்த சிறுவனின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீடிமெட்லா பொலிசார் உதயாவையும் அவரது காதலன் பாஸ்கரன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *