80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகனா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! வெளியான புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

80- 90 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன். ஆம் பயணங்கள் முடிவதில்லை, நெஞ்சத்தை கிள்ளாதே, மௌன ராகம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை சம்பாதித்தார். நடிகர் மோகன் 1980 களில் ‘வெள்ளி விழா ஹீரோ’ என்று அழைக்கப்பட்டார். கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.

   

விதி, நூறாவது நாள், ரெட்டை வால் குருவி, சகாதேவன் மஹாதேவன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார் நடிகர் மோகன். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.

ஆனால் 1990ருக்கு பிறகு எந்த ஒரு படத்திலும் பெருதும் நடிக்காமல் தற்போது வரை ஓரிரு திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மைக் மோகன் பிரபல நடிகை சாம்ஸ் என்பவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் புகைப்படத்தில் முறுக்கு மீசை, நீளமாக தாடி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகர் மோகன். இதோ அந்த புகைப்படம்..