திருமண வயதை தாண்டியும் சிங்கிளாக வாழும் 90’ஸ் கனவுக் கன்னிகள்… யார் யார் தெரியுமா?… இதோ பாருங்க…

90 களில் வலம் வந்த பிரபல நடிகைகள் சிலர் இப்பொழுதும் கூட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் மட்டுமல்ல 90 களில் வெளிவந்த படங்கள், பாடல்கள், முன்னணி நடிகர்கள் என அனைத்தையுமே குறிப்பிடலாம். தற்பொழுது இந்த பதிவில் திருமண வயதை தாண்டியும் சிங்கிளாக வாழும் 90ஸ் நடிகைகளை பற்றி காண்போம்.

   

நக்மா:

நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து ‘காதலன்’ திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நக்மா. முதல் படத்திலிருந்து கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி இளைஞர்களை வெகுவாக வந்தார்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது திரையுலகை விட்டு விலகினார்.

பின்னர் சிறிது காலம் கழித்து அரசியலிலும் குதித்தார். தற்பொழுது இவர் மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். 90ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கிய நடிகை நக்மா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து கொண்டுள்ளார்.

கௌசல்யா:

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. இவர்  விஜய், கார்த்தி, பிரபுதேவா  என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து  பிரபலமானவர்.

இவர் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கௌசல்யா.

இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார் நடிகை கௌசல்யா.

கிரண்:

90ஸ் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமலஹாசனுடன் அன்பே சிவம், அஜித் உடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து திரை உலகில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்பொழுது பட வாய்ப்புகள் கிடைக்காமல் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரும் தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்.

சோபனா:

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் கலக்கியவர் நடிகை சோபனா. இவர் தமிழில் ‘மங்களநாயகி’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

இவர் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக சிவா, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் திரையுலகையை விட்டு விலகி நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தபு:

பாலிவுட்டில் வெளியான ‘பஜார்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தபு. இவர் தமிழில் ‘காதல் தேசம் ‘திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்போது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ் என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை தபு. 51 வயதை தாண்டியும் தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

கோவை சரளா:

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் வலம்  வருபவர் நடிகை கோவை சரளா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகில் அசத்தியுள்ளார் நடிகை கோவை சரளா.  தற்பொழுது குணசித்திர வேடங்களிலும், அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.

இவரின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. 58 வயதை கடந்தும் தற்பொழுது வரை நடிகை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை.

கனகா:

தமிழ் சினிமாவில் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இப்படத்தின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அதிசய பிறவி’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘விரலுக்கேத்த வீக்கம்’.  ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை கனகா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.