சிறுவயது புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும்… இந்த இரண்டு பிரபல நடிகர்கள் யார் தெரியுமா?..

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் தான் நடிகர் விஜய் தேவர் கொண்டா. இவர் ‘பெல்லி சூப்லு’என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

   

அதை தொடர்ந்து இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘நோட்டா’ திரைப்படத்தில் நடித்து  தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில் குடும்ப நட்சத்திரம், VD12 என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார், இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இவருக்கு ஆனந்த் தேவரகொண்டா  என்ற தம்பியும் இருக்கிறார்.  இவரும் தற்போது தெலுங்கு சினிமாவில்  இளம் நடிகராக கலக்கி  கொண்டு வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் இருவரும் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.