அடப்பாவமே…!! காதல் தோல்வியில் மனிதர்களை மிஞ்சிய பூனை.. பழைய காதலியை பார்த்த பூனை செய்த செயலைப் பாருங்க..!

பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம்.

   

ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தை பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

ஆண் பூனை ஒன்று சக பெண் பூனையின் பின்னாலேயே லவ் மூடோடு சுற்றிவந்தது. ஆனால் அந்த பூனைக்கு வேறு ஒரு பூனையோடு அபெக்சன் இருந்தது. ஒருதலையாகக் காதலித்த பூனை வந்துகொண்டிருந்த போது வழியில் தான் லவ்விய பூனையும், அதன் காதலன் பூனையும் நெருக்கமாக இருந்து ஒருவருக்கொருவர் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தது.

இதை ஒரு நிமிடம் நின்று நிதானித்து அதிர்ச்சியாகப் பார்த்த ஒரு தலைக்காதல் பூனை, விடுகதையா வாழ்க்கை என ரஜினி மோஷனில் மிக மெதுவாக நடந்து அந்த இடத்தையே காலி செய்தது. இந்த காட்சியைப் பார்த்தாலே சோகம் அப்பிக் கொள்கிறது. இதோ இந்த வீடியோ உங்களுக்காக….