இதுவரை யாரும் பார்த்திராத சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளம் வயது புகைப்படம்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1990 களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

   

அதை தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அதிகமானார்.அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆற்றிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

இவர் பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள்  மூலம் வெற்றி நாயனாக வலம் வந்தார்.1990 களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றனார்.

இவர் தமிழ்  தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்,வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் உருவான  ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.