‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட விபத்து… ‘கால் எலும்புகள் முறிந்து விட்டது’… அவரே வெளியிட்ட பதிவு… ஆறுதல் கூறும் ரசிகர்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

   

இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதுவரை 300 எபிசோடுகளை இந்த சீரியல் எட்டியுள்ள நிலையில் சீரியலுக்கான வரவேற்பு பெரிய அளவில் உள்ளது. ‘கோலங்கள்’ சீரியலை தொடர்ந்து, திருச்செல்வத்தின் ‘எதிர்நீச்சல்’ சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சீரியல் நடித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா. சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கனிகா. இவர் அவ்வப்பொழுது தனது மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பதிவு ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், ‘இந்த புதிய Bootsவுடன் நடக்க பழகி வருவதாக, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் விரைவில் குணமடைய ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)