ஷூட்டிங் ஸ்பாட்டில் குக் வித் கோமாளி புகழ் மீது பாய்ந்த புலி… அச்சச்சோ… அப்புறம் என்ன ஆச்சு?… வைரலாகும் தகவல் இதோ…

மிஸ்டர் ஜூ கீப்பர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் புகழ் மீது புலி பாய்ந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலில் அறிமுகமானார் புகழ். பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

   

இதை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதை எடுத்து அவர் அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜயின் ‘யானை’ உள்ளிட்ட படங்களிள் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இத்திரைப்படத்தில் புலியை குளிப்பாட்டுவது போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு இயக்குனர் பயிற்சி பெற்ற ஒரு நிஜ புலியை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து படப்பிடிப்பை எடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில்  திடீரென புலி நடிகர் புகழின்  மீது பாய்ந்துள்ளது.

ஆனால் புலி கட்டப்பட்டிருந்ததால் நடிகர் புகழ் தப்பித்துள்ளார். இதனை தற்பொழுது படத்தின் இயக்குனரே இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் ‘உங்களுக்கு ஒன்னும் ஆகலையே’ என்று கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.