மாடாய் இருந்தாலும்…. மனுஷனா இருந்தாலும்…..! உயிர் உயிர் தானே….! மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட ரயில் ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாட்டை பார்த்து ரயில்வே ஊழியர் ரயில்வே நிறுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த காலத்தில் மனித உயிர்களை துச்சமாக நினைக்கும் பலருக்கு மத்தியில் மற்ற உயிர்களையும் உன்னதமானது என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்கள் அனைவரும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் சுயநலத்தை பற்றி மட்டுமே யோசித்து வருகிறார்கள்.

   

அவர்களுக்கு அதுக்கே நேரம் போகவில்லை என்று தான் கூற வேண்டும். பிறர்களைப் பற்றியோ மனிதாபிமானம் என்பது பற்றியோ அவர்களுக்கு யோசிக்க நேரமே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரு சில மனிதர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர் தான் இந்த ரயில் ஓட்டுநர். இவர் ரயில் தண்டவாளத்தில் ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென்று மாடுகள் குறுக்கே நெடுக்கே நடக்க தொடங்கிவிட்டது.

அதிலும் ஒரு மாடு வேகமாக ரயிலை கிராஸ் செய்தது.  ஆனால் மற்றொரு மாடோ ரயில் வருவதை அறிந்தும் ஓடாமல் ரயில் தண்டவாளத்திலேயே நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த ரயில் ஓட்டுநர் திடீரென்று ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். அதனால் அந்த மாட்டிற்கு எந்த ஒரு உயிர் சேதமும் ஆகவில்லை. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.