
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மிக அழகாக நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோவானது. இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மாணவர்களுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ அதை தாண்டி மற்ற விஷயங்களும் அதாவது நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் நினைக்கிறார்கள்.
பெரும்பாலும் ஏழை , எளிய குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து பாடங்களை பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று அரசும் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. தற்போது அரசு பள்ளியிலும், ஆசிரியர்கள் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு படிப்பை போதித்து வருகிறார்கள். அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.
இது போன்ற பல வீடியோக்களானது இணையத்தில் தற்போது வலம் வருகின்றது. தனது கல்வித் திறமையை தொடர்ந்து அதிகரிக்க பல முயற்சிகளை அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது ஆசிரியர் ஒருவர் அழகாக மாணவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…