
மலையாளத் திரை உலகை மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன்லால். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது தந்தை விஸ்வநாதன் நாயர் கேரளா அரசின் முன்னாள் அதிகாரியும் சட்டச் செயலாளர் பணியாற்றினார். நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் Commerce பட்டம் பெற்றார்.மோகன்லால் கம்ப்யூட்டர் பாய் என்ற மேடை நாடகத்தில் ஆறாம் வகுப்பு மாணவராக இருந்த போது முதன்முதலாக நடித்தார். அதில் தொண்ணூறு வயது முதியவராக நடித்தார்.
இவர் 1977 முதல் 1978 வரை கேரள மாநில மல்யுத்த வாகையாளராக இருந்தார் 1978 ஆம் ஆண்டு வெளியான ‘தீரனோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து என் மோகங்கள் பூவணிஞ்சு , இனியெங்கும் , விசா , அட்டக்கலாஷம் , கலியில் அல்பம் காரியம் , என் மாமட்டுக்குட்டியம்மாக்கு , எங்கே நீ மறக்கும் , உணர், ஸ்ரீகிருஷ்ணா பருந்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழிலும் ஜில்லா, இருவர் போன்ற படங்களில் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
#MohanLal At The Age Of 63????pic.twitter.com/YmGxRlQlBy
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 25, 2023