பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் நடிகை வனிதா. இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ,ஜோவிகா, ஜோனிகா என்ற மகளும் உள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிதா அண்மையில் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் தற்போது சினிமாவில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வனிதா ஏற்கனவே Youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல வீடியோக்கள், விவாதங்கள் வெளியிட்டு, அதன் மூலம் நிறைய சம்பாதித்து வருகிறார். மேலும் அது மட்டுமின்றி சொந்தமாக துணிக்கடை ஒன்றை வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறார்.
விவி ஸ்டைலிங் என்ற பெயரில் நடத்தி வரும் இந்த கடையில் உள்ள அனைத்து ஆடைகளும் வனிதா வடிவமைத்த ஆடைகள் என்று கூறப்படுகிறது. இந்த கடையின் மூலம் பல லட்சங்களில் வருமானம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வனிதா பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்து முடித்துள்ள நிலையில், சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.