
‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தனது குடும்பத்தை இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கும் இயக்குனர் தான் திருச்செல்வம்.
கோலங்கள் சீரியலை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் இவர் தனது சீரியலை ரசித்து ஆத்மார்த்தமாக எடுப்பதுதான். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
இயக்குனர் திருச்செல்வம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மக்கள் மத்தியில் எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடத்தில் கூட வரவேற்பை பெற்றுருக்கிறது’ என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவர் தனது குடும்பப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தது கிடையாது.
அவர்களைப் பற்றி பெரிதாக பேசியதும் கிடையாது. மேலும் இவர் ‘தனது சீரியல் குழு தான் தனக்கு இருக்கும் பெரிய பலம் என்றும் அவர்களே தனது சொந்த குடும்பம்’ என்றும் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.