நடிகர் விஷாலின் அப்பா மற்றும் அம்மாவை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

தமிழ் திரையு லகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஷால். இவரின் முழு பெயர் விஷால் கிருஷ்ண ரெட்டி. இவர் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தார்.

   

இவர் தாய்மொழி தெலுங்காகும்.  இவர் தந்தை தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி ஆவார்.

தற்போது இவரின்  குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. இவர் தொன்போசுகோ என்ற பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

லயோலா  கல்லூரியில்  மேற்படிப்பு  படித்தார். இவரது பேராசிரியர் ராஜநாயகம் தந்த  ஊக்கத்தின் மூலமாக நடிப்புத் துறையில் இவர் நடித்துள்ளார்.

இவர் முதலில் 2004 ஆம் ஆண்டு ‘செல்லமே’ படத்தில் ரகுநாதன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் துறையில்  அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து இவர்’ சண்டக்கோழி’ படத்தில் பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதன்பிறகு ‘தாமிரபரணி என்ற படத்தின் மூலமாக தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் தமிழில் அவன் இவன் ,பாண்டியநாடு, பூஜா, ஆம்பள, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன், சண்டைக்கோழி, இரும்புத்திரை, என பல படங்கள்  நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட இவர் ‘பூஜா’, ‘ஆம்பள’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிகர் அர்ஜுனிடம் ‘வேதா’ ‘ஏழுமலை’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இவர் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, போன்ற  மொழி   படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது தமிழ் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற பதவியிலும் உள்ளார். தற்போது இவரின் குடும்ப  புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.