நடிகை சமந்தாவின் அம்மா, அப்பாவை பார்த்திருப்போம்… சகோதரரை பார்த்திருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….

தெனிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் மாடலிங் துறையில் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். நடிகை சமந்தா சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் நடிப்பில் தற்போது ‘யசோதா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தற்பொழுது இவர் விஜய் தேவர் கொண்டா  உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை சமந்தா தற்பொழுது ‘மயோசிட்டிஸ் ‘ நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்பொழுது சிகிச்சை முடிந்து நாடு திரும்பியுள்ள அவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படம் நடிகை சமந்தாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகை சமந்தாவின் சகோதரர்கள் அவருடன் இருக்கின்றனர். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ‘நடிகை சமந்தாவின் சகோதரர்களா?’ என்று அக்காரியதுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம் இதோ…